[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
ஐவர் மின்னொளி கால்பந்தாட்ட போட்டி
uefajuniorsDate: Tuesday, 2010-09-07, 7:43 PM | Message # 1
Admin
Group: Administrators
Messages: 54
Status: Offline
ஐவர் மின்னொளி கால்பந்தாட்ட போட்டி

நமதூர் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐவர் மின்னொளி கால்பந்தாட்ட போட்டியின் முதல் போட்டியில் C-United அணியை எதிர்த்து UEFA ஜீனியர்ஸ் அணி விளையாடியது. இந்த சுற்றுப்போட்டியில் எல்லா அணிகளும் முறையே 15 – 5 – 15 என்கின்ற நேரத்தில் விளையாடும்படி போட்டியின் அமைப்பாளர் தமீம் கேட்டுக்கொண்டார்.

அதன்படி விளையாடத்துவங்கிய இரண்டு அணி வீரர்களும் மிகவும் ஆக்ரோசமாக விளையாடினர். ஆட்டம் துவங்கிய 8-வது நிமிடத்தில் UEFA ஜீனியர்ஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலைபெற்றது. பிறகு போராடிய C-United அணியினர் 12-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமன் செய்தனர். பிற்பகுதில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.ஆட்டநேர இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் போட்டியில் சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் UEFA ஜீனியர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


வெற்றிபெற்ற UEFA ஜீனியர்ஸ் அணியினர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் BGF-United அணியை எதிர்த்து Western Guys அணியினர் விளையாடினர். சமபலத்துடன் விளையாடிய இரண்டு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடினர். BGF-United அணியினர் 4 கோல்கள் அடித்தனர் Western Guys அணியினரும் 3 கோல்கள் அடித்து வெற்றியை ஒரு கோல் வித்தியாசத்தில் நழுவவிட்டனர்.

நேற்று நடைபெற்ற மூண்றாவது போட்டியில் Gallery Birds- A அணியை எதிர்த்து MSC அணியினர் விளையாடினர்.ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய Gallery Birds- A அணியினர் அடுத்து அடுத்து 3 கோல்களை அடித்து மிகவும் எளிதாக MSC அணியை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றான லீக் போட்டிக்கு UEFA ஜீனியர்ஸ், BGF-United மற்றும் Gallery Birds- A அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று இந்த சுற்றுப்போட்டியின் B-POOL ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிகளின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் 9-9-10 அன்று நடைபெறவிருக்கின்றன.

 
  • Page 1 of 1
  • 1
Search: