[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
நிலவை 'குளோசப்'பில் படம் எடுத்த எம்.ஐ.பி.
kayalboyzDate: Sunday, 2008-11-16, 3:26 PM | Message # 1
Private
Group: Users
Messages: 5
Status: Offline

சந்திரயான்-1ல் செலுத்தப்பட்ட எம்.ஐ.பி., கருவி, நிலவில் மோதி இறங்குவதற்கு முன், நிலவை மிக அருகில் இரண்டு புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவிற்கு இந்தியா அனுப்பியுள்ள சந்திரயான்-1 செயற்கைக்கோளில் இடம் பெற்றிருந்த எம்.ஐ.பி., கருவி, நேற்று முன்தினம் இரவு 8.31 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கியது. செயற்கைக் கோளிலிருந்து இரவு 8.06 மணிக்கு பிரித்துவிடப்பட்ட 34 கிலோ எடை கொண்ட எம்.ஐ.பி., கருவி, 25 நிமிடங்கள் பயணம் செய்து நிலவில் இறங்கியது.

எம்.ஐ.பி., நிலவை நெருங்கியபோது, நிலவை இரண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் எம்.ஐ.பி., கருவியிலிருந்து, செயற்கைக்கோளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த புகைப்படங்களை "இஸ்ரோ' வெளியிட்டுள்ளது. செயற்கைக்கோளில் உள்ள "டெரைன் மேப்பிங் கேமரா, ரேடியேஷன் டோஸ் மானிட்டர்' ஆகிய இரண்டு கருவிகள் இயக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகின்றன.

செயற்கைக்கோளில் உள்ள மற்ற எட்டு கருவிகளும், வரும் நாட்களில் இயக்கப்படும் என "இஸ்ரோ' தெரிவித்துள்ளது. எம்.ஐ.பி., கருவி நிலவில் இந்திய தேசியக்கொடியை இடம்பெறச் செய்ததற்காகவும், இத்திட்டம் வெற்றி பெற்றதற்காகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Message edited by kayalboyz - Sunday, 2008-11-16, 3:28 PM
 
  • Page 1 of 1
  • 1
Search: