மாநில சப்-ஜீனியர் கால்பந்து போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணிக்கு வெற்றிக்கோப்பை.
வீரபாண்டியன்பட்டினத்தில், பட்டணம் இளைஞர் மன்றம் சார்பாக கால்பந்தாட்டக் கழகம் துவங்கி 50 ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு 27வது சப்-ஜூனியர் சாம்பியன் ஷிப் மாநில கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவந்தது.
போட்டியில் 23 மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொன்டனறனர். நேற்று மாலை (03/10) நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியும் சிவகங்கை மாவட்ட அணியம் விளையாடின போட்டி துவங்கிய கிறிது நேரத்திலேயே தூத்துக்குடி மாவட்ட அணியினர் 1 கோல் அடித்து முன்னிலை பெற்றனர்.
பிற்பகுதியில் சுறுசுறுப்புடன் விளையாடிய சிவகங்கை அணியினரின் தாக்குதல் ஆட்டத்திற்கு தூத்துக்குடி அணியினரால் ஈடுகொடுக்க முடியாமல் தினறினர் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சிவகங்கை அணியினர் 1 கோல் அடித்து 1-1 என்ற கோல் கணக்கில் சமன்செய்தனர். தூத்துக்குடி அணிக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பை நமதூர் வீரர் ஹனீஃபா அற்புதமான முறையில் கோல் அடிக்க தூத்துக்குடி மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் இருந்தனர்.
ஆட்டம் முடிய சிறிது நேரத்திற்கு முன் கிடைத்த வாய்ப்பை சிவகங்கை வீரர் அற்புதமாக கோல்ஆக்க முயற்சிசெய்தார் ஆனால் நமதூரைச்சேர்ந்த கோல் கீப்பர் நல்ல முறையில் பாய்ந்து அதைதடுத்தார் இதன் பிறகு சிவகங்கை அணிக்கு ஆட்டநேரம் முடியும்வரை கோல் அடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே தூத்துக்குடி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மாநில சப்-ஜீனியர் கோப்பையை தட்டிச்சென்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை பட்டணம் இளைஞர் மன்றத் தலைவர் நெவில் அ.கற்றார், செயலாளர் ஆனந்த் ரொட்ரிக்கோ, பொருளாளர் பெனட் பர்னாந்து, முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆர்லண்டோ ராயன், சேஜையா வில்லவராயர்,லடீஸ்லாஸ் ரொட்ரிக்கோ, ஸ்ரீதர் ரொட்ரிக்கோ உட்பட பலர் செய்திருந்தனர்.