புன்னக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி வெற்றி.
கடந்த ஜீன் மாதம் புன்னக்காயலில் நடைபெற்ற அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஜேரா நினைவு வெள்ளிக்கோப்பைக்கான 37-வது மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி ஜீன் 9-ந் தேதி துவங்கியது அதில் மொத்தம் 12 அணிகள் பங்குகொண்டன. அதன் இறுதிப்போட்டி ஜீன் 20-ந் தேதி நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியும் தூத்துக்குடி சிக்கால் அணியும் விளையாடின சமபலத்துடன் விளையாடிய இரண்டு அணிகளும் முதல் பாதி வரை கோல்ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியில் ஐக்கிய விளையாட்டுச்சங்க அணியினரின் தாக்குதல் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிக்கால் அணியினர் தினறினர். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் ஐக்கிய விளையாட்டுச்சங்க அணி வீரர் யூசுஃப் தமது அணிக்காக அற்புதமான ஒரு கோல் அடிக்க அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு சிக்கால் அணியினர் போராடியும் அவர்களால் ஆட்டநேர இறுதிவரை கோல் அடிக்கமுடியவில்லை. எனவே ஐக்கிய விளையாட்டுச்சங்க அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஜேரா நினைவு வெள்ளி சுழற்கோப்பையை தட்டிச்சென்றனர்.