[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
கே.வி.ஏ.டி. ஐவர் கால்பந்துப் போட்டி:
uefajuniorsDate: Monday, 2009-01-05, 8:33 AM | Message # 1
Admin
Group: Administrators
Messages: 54
Status: Offline
கே.வி.ஏ.டி. ஐவர் கால்பந்துப் போட்டி: சி-யூனைட்டெட் அணிக்கு கோப்பை!

காயல்பட்டணம் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பாக - கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி நினைவூ ஐவர் கால்பந்து முதலாமாண்டு போட்டி கடந்த 01.01.2009 மற்றும் 02.01.2009 தேதிகளில் - காயல்பட்டணம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பீம் பாய்ஸ் - நெய்னார் கய்ஸ் - ஸ்பானிஷ் ஸாக்கர் - சி-யூனைட்டெட் - எம்-யூனைட்டெட் - ஆர்ஸெனல் - கே.வி.ஏ.டி.எவர்வின்ஸ் ஜூனியர் - கே.வி.ஏ.டி.எவர்வின்ஸ் சீனியர் ஆகிய அணிகள் கலந்துகொண்டன.

நாக்-அவூட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு கே.வி.ஏ.டி.எவர்வின்ஸ் ஜூனியர் அணியூம் மற்றும் சி-யூனைட்டெட் அணியூம் தகுதி பெற்றன. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சி-யூனைட்டெட் அணி வெற்றி பெற்று பரிசுக்கோப்பையைத் தட்டிச் சென்றது.

பரிசளிப்பு நிகழ்ச்சி : காயல்பட்டணம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்றது. கத்தர் காயல் நல மன்ற மருத்துவ உதவித்துறை பொறுப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஷாஹ்மீரான் கிராஅத் ஓதினார். பாலப்பா வரவேற்புரையாற்றினார்.

திருச்செந்தூர் வட்டார காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுவாமிதுரை வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் கத்தரிலிருந்து தாமஸ் வாக்கர் - முஹம்மத் முஹ்யித்தீன் - ஹாங்காங் வி-யூனைட்டெட் சார்பாக அதன் நிறுவனர் அலீ ஃபைஸல் - ஹபீபுர்ரஹ்மான் உள்ளிட்டோரும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

சிறந்த இளம் ஆட்டக்காரருக்கான பாpசை சி-யூனைட்டெட் அணியின் சத்தாம் ஹுஸைனும் - சிறந்த கோல் கீப்பருக்கான பாpசை கே.வி.ஏ.டி.எவர்வின்ஸ் ஜூனியர் அணியின் ஸஹாபுத்தீனும் - சிறந்த தொடர் வீரருக்கான பரிசை அதே அணியின் வாவூ முஹம்மத் முஹ்யித்தீனும் பெற்றனர்.

இவ்விழாவில் தேசிய கால்பந்தாட்ட வீரர் காயல் காழி அலாவூத்தீனுக்கு பரிசு வழங்கி கவூரவிக்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் மாணவர்களை உற்சாகப்படுத்திய கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மதுக்கு ஹாங்காங் வி-யூனைட்டெட் நிறுவனம் சார்பில் நினைவூப் பரிசை ஹாங்காங் ஹபீபுர்ரஹ்மான் வழங்கினார்.

காயல்பட்டணம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற - துஆவூடன் விழா நிறைவூற்றது.

போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையூம் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை மேலாளர் கே.ஆஷிக் - ஏ.எச்.எம்.முக்தார் - ஜாஃபர் மற்றும் ஜவஹர் ஆகியோர் செய்தனர்.



நன்றி : காயல்பட்டணம்.காம்
 
  • Page 1 of 1
  • 1
Search: