காயல்பட்டணத்தில் ஐவர் கால்பந்துப் போட்டி :
குருவித்துறைப் பள்ளி திடல் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
F.T.C. மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டி 15-12-2008 முதல் 28-12-2008 ஞாயிற்றுக்கிழமை வரை நடந்தது. இப்போட்டியை Y.U.F. பொதுச் செயலர் S.A.K. மெய்தீன் அவHகளின் உதவியூடன் F.T.C. ஆசிரியர் S.H. மீரா சாகிபு B.Sc., B.A., B.A. B.Ed., PGDHM அவர்களும் இணைந்து நடத்தினர்.
FTC YUF TOURNAMENT Date On 15-12-2008 To 28-12-2008
Participated Teams
1) East Team 2) West Team 3) South Team 4) North Team 5) FTC A
6) YUF A 7) FTC B 8) YUF B 9) FTC C 10) YUF C
FTC யில் கல்வி பயின்று வரும் 10 வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களை “10” அணிகளாக பிரித்து ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் பிரிக்கப்பட்டு 5 வீரர்கள் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டது. லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பின்பு அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் கிழக்குப் பகுதியில் உள்ள M.U. சாலிஹ் வாசிப் தலைமையிலான YUF A அணியூம் மேற்குப் பகுதியில் உள்ள A.H. உமர் பாரூக் தலைமையிலான FTC A அணியூம் விளையாடியது. அதில் மேற்குப் பகுதியில் உள்ள அணி கிழக்குப் பகுதியில் உள்ள அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கும்இ வெற்றிக்கு முயன்ற அணிக்கும் காயல்பட்டணத்தில் முக்கிய பிரமுகரான கிழக்குப் பகுதியில் உள்ள ஜனாப் அல்ஹாபிழ் S.A. இஸ்மாயில் அவHகள் கோப்பையையூம் பரிசுகளையூம் கொடுத்து வீரர்களை கவூரவப்படுத்தினார்.
ஆட்ட நாயகன் விருதையூம் தொடர் நாயகன் விருதையூம் உமர் பாரூக் என்பவர் தட்டிச் சென்றார்.
காயல் பிரபல கால்பந்து வீரர் அல்ஹாஜ் செய்யது மொகுதூம் விளையாட்டு வீரருக்கான சிறப்புப் பரிசுகளை வழங்கினார்.
செய்தி : காயல்பட்டணம்.காம்