நகரிலேயே முதன்முதலாக சிறுவர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி!
பள்ளிக்கூடங்களில் பயிலும் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குபெறும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை காயல்பட்டணத்தில் முதன்முதலாக நடத்தி சாதனை புரிந்துள்ளனர் தாய்லாந்து - பாங்காக் நகரிலுள்ள சன் மூன் ஸ்டார் கால்பந்தாட்டக் குழு. காயல்பட்டணம் நகரில் பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாங்காக்கில் பணியாற்றி வரும் எம்.ஹெச்.ஸாலிஹ் எம்.ஹெச்.புஹாரீ மற்றும் எம்.ஹெச்.மாலி ஆகியோர் இணைந்து இக்குழுவைத் துவக்கினர்.
தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் செயல்பட்டு வரும் இக்குழுவின் கால்பந்தாட்ட அணி தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்க நாட்டு அணிகளுடன் அண்மையில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை கடந்த 03.11.2008 அன்று காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டு சங்க (யு.எஸ்.ஸி.) மைதானத்தில் இக்குழு நடத்தியது.
இச்சுற்றுப் போட்டியில் வின்னிங் ஸ்டார் ப்ளு ஸ்டார் க்ரிஸ்டல் எஃப்.சி. முஹ்யித்தீன் ஸ்கூல் எஃப்.சி. காயல் லெஜன்ட்ஸ் காயல் ஸ்பீட் சாக்கர்ஸ் சென்னை கிங்ஸ் மற்றும் காயல் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டன.
சுற்றுப்போட்டிகளின் முடிவில் வின்னிங் ஸ்டார் அணி வெற்றி பெற்ற அணியாகவும் ப்ளு ஸ்டார் அணி வெற்றிக்கு முனைந்த அணியாகவும் தேர்வாயின.
இச்சுற்றுப்போட்டிக்கான மொத்தச் செலவையும் தாய்லாந்து - பாங்காக்கிலுள்ள சன் மூன் ஸ்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனம் செய்திருந்தது. சில பரிசுகளுக்கு காயல்பட்டணம் நகரின் சில தனிநபர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.
இச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான பரிசை பாங்காக் சன் மூன் ஸ்டார் நிறுவனம் வழங்க வெற்றிக்கு முனைந்த அணிக்கான பரிசை காயல்பட்டணம் கலாமீ ரெடிமேட்ஸ் வழங்கியது.
மூன்றாவது இடத்தில் தேர்வான முஹ்யித்தீன் ஸ்கூல் எஃப்.சி. அணிக்கும் நான்காவதாக வந்த க்ரிஸ்டல் எஃப்.சி. அணிக்குமான பரிசை காயல்பட்டணம் ஜுபைர் சகோதரர்கள் மற்றும் ஹெச்.எம்.பி.ஹாமித் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
சிறந்த சிறுவர் ஆட்டக்காரருக்கான பரிசை மாணவர் முஹம்மத் பெற்றார். இவருக்கான பரிசை தங்கள் ஜெம்ஸ் நிறுவனம் எம்.ஏ.சி.செய்யித் இப்றாஹீம் மற்றும் சன் மூன் ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்கின.
பாலப்பா இஸ்மாயில் ஆகியோர் இச்சுற்றுப்போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றினர். யாஸீன் முஹம்மத் ஸாலிஹ் மற்றும் இம்ரான் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
நன்றி : காயல்பட்டணம்.காம்