uefajuniors | Date: Saturday, 2008-12-20, 8:56 AM | Message # 1 |
Admin
Group: Administrators
Messages: 54
Status: Offline
| சீனா கொரியா செட் வைத்திருக்கும் 2.5 கோடி பேரின் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு : ஜனவரியில் அமலாகிறது.... விலை குறைவாக இருக்கிறதே என நினைத்து சீன கொரியா செல்போன்களை வாங்கி இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஜனவரி 6ம் தேதியில் இருந்து அதை பயன்படுத்த முடியாத நிலை வரப் போகிறது. ஆம். அன்று மட்டும் 2.5 கோடி டுபாக்கூர் செல்போன்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பை துண்டிக்கப் போகின்றன. கம்பெனிகள் தயாரிக்கும் செல்போன்களில் ஐஎம்இஐ எண் இருக்கும். ஐஎம்இஐ என்பது சர்வதேச செல்போன் கருவி அடையாள எண். இது போலிகளில் இருக்காது. குறிப்பாக நம் நாட்டில் பரவலாக விற்பணையாகும் சீன கொரியா செல்போன்களில் இது இருக்காது. போனில் ஒரு அழைப்பு செய்யும் போது செல்போன் நிறுவன நெட்வொர்கில் அந்த போனின் ஐஎம்இஐ எண் தெரியும். ஆனால் சீன கொரியா செல்போன்களை பயன்படுத்தினால் அந்த எண்கள் தெரிவது இல்லை. ஐஎம்இஐ எண் மூலம் திருடப்பட்ட செல்போனில் இருந்து அழைப்புகள் செய்வதை தடுக்க முடியும். மேலும் ஐஎம்இஐ எண் உள்ள போன் போலீஸருக்கும் பலவிதங்களில் பயன்படுகிறது. இந்த எண் மூலமாக சம்பந்தப்பட்ட போனை ஒருவர் பயன்படுத்தினர் என்பதை நிருபிக்க முடியும். துண்டிக்குமாறு செல்போன் எனவே ஐஎம்இஐ எண் இல்லாத போன்களில் இது முடியாது. இதை திவிரவாதிகள் சமூக விரோதிகள் பயன்படுத்துவதாக தெரிகிறது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு சேவையை துண்டிக்குமாறு செல்போன் நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான நவீன கருவிகள் தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் 3 மாதத்தில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி தொலைத்தொடர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதையெடுத்து ஜனவரி 6ல் இது அமலாகிறது.
|
|
| |